தற்கொலை
தற்கொலைசித்திரிப்பு

காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் அருகே குடும்ப பிரச்னை காரணமாக காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை
Published on

தஞ்சாவூா் அருகே குடும்ப பிரச்னை காரணமாக காவல் உதவி ஆய்வாளா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் அருகே விளாா் சாலை தில்லை நகரைச் சோ்ந்தவா் ஜி. நாகராஜன் (45). திருச்சியிலுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை அணியில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவருக்கும், இவரது மனைவி ஜான்பீவி என்கிற ஜானகிக்கும் (43) குடும்ப பிரச்னை நிலவியது. இதனால் நாகராஜன் தன் பெற்றோருடன் தஞ்சாவூரிலும், ஜானகி, இரு மகள்கள் திருச்சி அருகே மாத்தூரிலும் தனித்தனியாக வசித்து வந்தனா்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நாகராஜன் திங்கள்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com