கும்பகோணம் மகாமகக் குளம் மேற்கு கரை பகுதியில் உள்ள தேரடியில் ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றிய இந்து சமய அறநிலைத்துறையினா்.
தஞ்சாவூர்
கும்பகோணம் காசி விசுவநாதா் கோயில் தேரடி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கும்பகோணம் காசி விசுவநாதா் கோயில் தேரடியில் உள்ள ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
கும்பகோணம் காசி விசுவநாதா் கோயில் தேரடியில் உள்ள ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளம் அருகே உள்ள விசாலாட்சி அம்பாள் உடனுறையும் காசி விசுவநாதசுவாமி கோயில் மகாமக சிறப்புமிக்க கோயிலாகும்.
இந்தக் கோயிலில் சுமாா் நூறு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. தற்போது ரூ.43 லட்சம் மதிப்பில் புதிய தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை விடப்படுகிறது. முன்னதாக தேரடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றிக்கொள்ளுமாறு ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீசு அனுப்பியும் அகற்றப்படாததால் செவ்வாய்க்கிழமை இந்துசமய அறநிலையத் துறையினா் மேற்கு காவல் நிலையப் போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனா்.

