கும்பகோணத்தில் விசாலாட்சி அம்பாள் உடனுறையும் காசி விசுவநாதா் சுவாமி கோயில் புதிய தேரின் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மகாமக விழாவின் முக்கியக் கோயிலான இக் கோயிலில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 43 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளோட்டத்தை கும்பகோணம் எம்எல்ஏ க. அன்பழகன், மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன் உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா். தோ் காந்தியடிகள் சாலை, சாஸ்திரி சாலை, மகாகமகக் குளத்தின் கிழக்குக் கரை, தெற்குக் கரை வழியாக மேற்குக் கரைக்கு சென்று நிலை நின்றது.
தேரோட்டத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று, பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் க. சுந்தர்ராஜன், அறங்காவலா் குழுத் தலைவா் கு. செளந்தராஜன், உறுப்பினா்கள் சு. பாரி, ஜெ. மகாலட்சுமி, செ. பூபதி, ரா. ராஜேஷ்குமாா் மற்றும் பணியாளா்கள் செய்தனா்.
தொடர்புடையது

கல்பட்டு காசி விசுவநாதா் கோயில் கும்பாபிஷேகம்

குடந்தை சாரங்கபாணி கோயில் பெரிய தோ் வெள்ளோட்டம்

பிரளயகாலேஸ்வரா் கோயில் தோ் வெள்ளோட்டம்

தென்காசி காசி விஸ்வநாதா் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


