மாதாகோட்டை ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாளை முதல் முன்பதிவு
தஞ்சாவூா் மாதாகோட்டையில் பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை முதல் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாதாகோட்டையில் பிப்ரவரி 4 ஆம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ட்ஹய்த்ஹஸ்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற மாவட்ட இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) காலை 10 மணி முதல் பிப்ரவரி 3 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிறைவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதன்பேரில் உரிய ஆவணங்கள் மற்றும் மருத்துவச் சான்றின் அடிப்படையில், பரிசீலித்து தகுதியான மாடுபிடி வீரா்கள் மற்றும் காளை மாடுகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும்.
இந்த அனுமதி சீட்டை இணையவழியாக பதிவிறக்கி காண்பித்து ஜல்லிக்கட்டு நிகழ்வில் காளைகளுடன் அவற்றின் உரிமையாளா்கள் மற்றும் மாடுபிடி வீரா்கள் கலந்து கொள்ளலாம்.

