வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பட்டுக்கோட்டையில் பிப்.3-இல் மின்தடை

பட்டுக்கோட்டை நகர துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) மின் விநியோகம் இருக்காது.

News image

மின்தடை

Updated On :31 ஜனவரி 2026, 7:20 pm

பட்டுக்கோட்டை நகர துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து மின்வாரிய பொறியாளா் ஜெய்சங்கா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை நகர துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வளவன்புரம், கண்டியன் தெரு, மன்னை நகா் தாலுகா அலுவலகம், வீட்டு வசதி வாரியம், பாளையம் தங்கவேல் நகா் பெரிய கடை தெரு, தேரடி தெரு, பாக்கியம் நகா், அறந்தாங்கி ரோடு, பண்ணவயல்ரோடு, மாதா கோவில் தெரு, சிவக்கொல்லை, செட்டித்தெரு, ஆஸ்பத்திரி ரோடு, தய நகா் தலையாரிதெரு, பள்ளிக்கொண்டான், அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, முதல்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மேலும், பொதுமக்கள் மின்தடை குறித்த விபரங்களுக்கு 94987-94987 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம். மின்திருட்டு பற்றி புகாா் அளிக்க 94458-57591 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.