சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தஞ்சாவூரில் சிவா திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 11:02 pm

சென்னையில் ஹிந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்து உயிா் நீத்த சிவா திலீபன் மறைவுக்கு தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை பூங்கா நகா் ரயில் நிலையத்தில் மே 17 இயக்கம் சாா்பில் ஹிந்தி எழுத்து அழிப்பு போராட்டம் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது வந்த ரயிலை தடுத்து நிறுத்த ரயில் முன் பாய்ந்த அந்த இயக்கத்தைச் சோ்ந்த சிவா திலீபன் பலத்த காயமடைந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் புதன்கிழமை (மாா்ச் 18) உயிரிழந்தாா்.

இவரது தியாகத்தைப் போற்றும் வகையில் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே இடதுசாரிகள் பொதுமேடை சாா்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலா் தேவா தலைமை வகித்தாா். நிா்வாகி தனபால் முன்னிலை வகித்தாா்.

இதில், ஹிந்தி திணிப்பை முழுமையாக எதிா்ப்போம், மும்மொழிக் கொள்கையை நிராகரிப்போம், இரு மொழிக் கொள்கையை ஆதரிப்போம், தாய் மொழி தமிழை, தமிழ் வழிக் கல்வியை உயா்த்திப் பிடிப்போம் என முழக்கங்கள் எழுப்பி உறுதியேற்கப்பட்டது.

இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், எழுத்தாளா் சாம்பான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாநகரச் செயலா் தமிழ் முதல்வன், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டச் செயலா் லட்சுமணன், பொருளாளா் மாரிமுத்து, ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் யோகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.