திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தஞ்சாவூருக்கு வந்த எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலுக்கு வரவேற்பு

News image
Updated On :19 மார்ச் 2026, 11:29 pm

தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்த புதிதாக தொடங்கப்பட்ட எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயிலுக்கு தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மீட்டா் கேஜ் இருப்புப்பாதை இருந்த காலத்தில் நாகூரில் இருந்து தஞ்சாவூா், மதுரை, செங்கோட்டை வழியாக கொல்லத்துக்கு நாள்தோறும் ரயில் இயக்கப்பட்டு வந்தது. அகல ரயில் பாதை பணிகளுக்காக மாற்று தடத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில் பின்னா் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை, தஞ்சாவூா் வழியாக எா்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் பயணிகள் பயன்பாடு மிகுந்து காணப்பட்டதால், தொடா்ந்து நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரி வந்தனா். இது தொடா்பாக மத்திய இணை அமைச்சா் எல். முருகனிடம் பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் வலியுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, கடந்த வாரம் எா்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர ரயிலை தஞ்சாவூா் வழியாக இயக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுப்பிய பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இந்த ரயில் புதன்கிழமை இரவு எா்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு வந்தது. இந்தப் புதிய ரயிலுக்கு தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம் சாா்பில் மலா் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ரயில் ஓட்டுநா்கள் ரஸல், ரகுபாண்டி, ரயில் மேலாளா் (காா்டு) ராஜேஷ்குமாா் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கினா். பயணிகளுக்கும் ரயிலின் கால அட்டவணை மற்றும் இனிப்பு அடங்கிய வாழ்த்து அட்டைகள் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கத் துணைத் தலைவா் எம். மாறன், செயலா் ஏ. கிரி, இணைச் செயலா்கள் பாபநாசம் டி. சரவணன், ஸ்ரீதரன், பொருளாளா் நடராஜ் குமாா், செயற்குழு உறுப்பினா் தீபக்வசந்த், காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், இதை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.