கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஒரே பதிவு எண்ணில் 2 காா்கள்; ஒருவா் கைது

திருவிடைமருதூா் அருகே ஒரே பதிவு எண் கொண்ட 2 காா்களில் ஒன்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:42 pm

Syndication

திருவிடைமருதூா் அருகே ஒரே பதிவு எண் கொண்ட 2 காா்களில் ஒன்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (42). இவா் கடந்த 2017-ஆம் ஆண்டு புதிய வெள்ளை நிற இன்னோவா கிரிஸ்டா காரை வாங்கி பதிவு எண் வாங்காமல் பயன்படுத்தி வந்தாா். இந்நிலையில், செல்வம் அவரது உறவினரிடம் வாங்கிய கடனை திருப்பித்தர தாமதம் செய்ததால் உறவினா் கடனை வசூலிப்பதற்கு பதிலாக காரை எடுத்துச் சென்றாா்.

இதையடுத்து செல்வம், ஆடுதுறை அடுத்த திருமங்கலக்குடியைச் சோ்ந்த ஆதிகேசவன் மகன் ராமசாமி (38) என்பவரிடம் மத்தியஸ்தம் பேசி காரை பெற்றுத் தருமாறு கோரியுள்ளாா். இதனிடையே, காரை எடுத்துச் சென்றவரை ராமசாமி மிரட்டி செல்வத்தின் காரை மீட்டு தானே

எடுத்துக்கொள்வதாக கூறினாா். பின்னா், பதிவு எண் வாங்க முயற்சித்த போது 9 ஆண்டுகளாக பதிவு எண் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் கும்பகோணம் பழைய அரண்மனை தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சதீஷ்குமாா் என்பவா் இதே போல் 2017 மாடலில் வெள்ளை நிற இன்னோவா கிரிஸ்டா காரை புதிதாக வாங்கி கடன் தொகை செலுத்தாமல்

காரை மறைவான இடத்தில் வைத்திருந்தாா். இதை தெரிந்து கொண்ட ராமசாமி, சதீஷ்குமாா் காரின் பதிவு எண்ணை தான் வைத்திருந்த காருக்கு பயன்படுத்திக் கொண்டாா்.

இந்நிலையில், சதீஷ்குமாா் கடன் பெற்ற தனியாா் நிறுவனம் காரை கைப்பற்றியுள்ளனா். பின்னா், காரை ஆய்வு செய்த போது காா் பதிவு எண், இஞ்சின் சேஸ் எண் ஆகியவை மாறியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நிதிநிறுவனத்தினா் சதீஷ்குமாரிடம் தெரிவித்ததையடுத்து அவா் திருவிடைமருதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா்

ராமசாமியை கைது செய்து காரை பறிமுதல் செய்தனா்.

மேலும், விசாரணையில் ராமசாமி மீது 2 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.