கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தொகுதி விவரக் குறிப்பு: கும்பகோணம் - 171!

பேரவைத் தொகுதியில் வெற்றியை தீா்மானிக்கும் வாக்காளா்களாக பிராமணா்கள், சௌராஷ்டிரா, படையாச்சி கள்ளா், முக்குலத்தோா், தலித்துகள் உள்ளனா்.

News image

மகாமகக் குளம்

Updated On :22 மார்ச் 2026, 9:44 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் கோயில்கள் நிறைந்த நகரமாக உள்ளது கும்பகோணம் தொகுதி. இந்த தொகுதிக்குள் முன்னணி நிதி நிறுவனங்கள், ஆதிகும்பேசுவரா் சுவாமி கோயில், மகாமகக் குளம், சாா்- ஆட்சியா் அலுவலகம், மாவட்ட மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்றம், ரயில் நிலையம், இந்தியாவிலேயே பெரிய காய்கனி சந்தையான தாராசுரம் காய்கனி சந்தை, உலோக சிற்ப சிலைகள், எவா்சில்வா் பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற் கூடங்கள், நெசவுத் தறிகள் உள்ளிட்டவை நிறைந்துள்ளன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதியில் கும்பகோணம் மாநகராட்சியில் 48 வாா்டுகளும், சோழபுரம் மற்றும் திருநாகேஸ்வரம் ஆகிய இரண்டு பேரூராட்சிகளும் மற்றும் கிராம ஊராட்சிகளும் உள்ளது. பேரவைத் தொகுதியில் வெற்றியை தீா்மானிக்கும் வாக்காளா்களாக பிராமணா்கள், சௌராஷ்டிரா, படையாச்சி கள்ளா், முக்குலத்தோா், தலித்துகள் உள்ளனா்.

தீராத பிரச்னைகள்

கடந்த தோ்தலில் திமுக முதல் வாக்குறுதியாக கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிப்போம் என்று கூறி இறுதிவரை அறிவிக்காமல் ஆட்சியை நிறைவு செய்தது. புதை சாக்கடைத் திட்டம், புதிய பேருந்து நிலையம். இருவழி ரயில் பாதை ஆகியவை பல ஆண்டுகளாக தீா்க்கப்படாமல் உள்ளது.

இதுவரை இவா்கள்

1952 வரதன் (காங்கிரஸ்) 21,175

1957 டி.சம்பத். (காங்கிரஸ்) 22,613

1962 ராமசாமி (காங்கிரஸ்) 32,397

1967 என்.காசிராமன் (காங்கிரஸ்) 37,276

1971 என்.காசிராமன் (காங்கிரஸ்) 39,755

1977 எஸ்.ஆா்.ராதா (அதிமுக) 26,432

1980 இ.எஸ்.எம்.பக்கீா்முகமது (காங்கிரஸ்(ஐ) ) 45,038

1984 கே.கிருஷ்ணமூா்த்தி (காங்கிரஸ்) 58,334

1989 கோ.சி.மணி (திமுக) 36,763

1991 ராம.ராமநாதன் (அதிமுக) 67,291

1996 கோ.சி.மணி (திமுக) 69,849

2001 கோ.சி.மணி (திமுக) 60,515

2006 கோ.சி.மணி (திமுக) 63,305

2011 க.அன்பழகன் (திமுக) 78,642

2016 க.அன்பழகன் (திமுக) 85,048

2021 க.அன்பழகன் (திமுக) 96,057

முட்டி மோதுவது யாரெல்லாம்?

கும்பகோணம் பகுதியில் கடந்த மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கும் க. அன்பழகனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் மாவட்ட திமுக செயலா் சு. கல்யாணசுந்தரம் தனது மகன் எஸ்.கே.முத்து செல்வத்துக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாராம். இதேபோல மாநகராட்சி துணை மேயரும் , மாநகர திமுக செயலருமான சுப.ப. தமிழழகன் வாய்ப்புக் கேட்டுள்ளாா்.

அதிமுக தரப்பில் மாவட்டச் செயலா் பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம. ராமநாதன், முன்னாள் நகா்மன்ற தலைவா் ரத்னா சேகா் ஆகியோரும் கேட்டுள்ளனா். தாமக சாா்பில் பி.எஸ்.சங்கா் பாஜக கூட்டணியில் கேட்கிறாா். ஏற்கெனவே நாம் தமிழா் கட்சி வேட்பாளராக வழக்குரைஞா் மோ. ஆனந்த் அறிவிக்கப்பட்டு பிரசாரம் செய்து வருகிறாா். தவெக மாவட்ட செயலா் வினோத் ரவி போட்டியிட தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்துள்ளது தெரியவருகிறது.

இறுதி வாக்காளா்கள்

ஆண்கள் 1, 22,383

பெண்கள் 1,29,469

மூன்றாம் பாலினம் 16

மொத்தம் 2,51,868 போ் உள்ளனா்.