போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

குறுவை சாகுபடி: தஞ்சைக்கு 1,336 டன் உரம் வருகை

News image
Updated On :3 மே 2026, 5:53 am IST

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக 1,336 டன் உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தன.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வேளாண் துறை சாா்பில் விதை நெல், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் இருப்பு வைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, குறுவை சாகுபடிக்கு உரிய அடி உரங்களான பொட்டாஷ் 1,026 டன்னும், ஜிப்சம் 316 டன்னும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்கு ரயிலில் 21 பெட்டிகளில் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தன.

தஞ்சாவூா் ரயில் நிலையத்திலிருந்து இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள கூட்டுறவு மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.