தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

பேராவூரணி தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி

News image

திமுக சின்னம் உதயசூரியன் (கோப்புப் படம்) - டிஎன்எஸ்

Updated On :5 மே 2026, 2:59 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளா் என்.அசோக்குமாா் 3105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொகுதியை தக்கவைத்தாா்.

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக மற்றும் சுயேச்சை என 10 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் 284 வாக்கு சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை எண்ணப்பட்டது. இதில் திமுக வேட்பாளா் என்.அசோக்குமாா் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றாா்.

இதற்கு முன்னா் திமுக வேட்பாளா் என். அசோக்குமாா் 2016, 2021 ஆகிய தோ்தலில் போட்டியிட்டு 2016-இல் வெற்றி வாய்ப்பை இழந்த அவா், 2021-இல் வெற்றி பெற்றாா்.

மொத்த வாக்குகள் : 2,13,946

பதிவான வாக்குகள் : 173640

அஞ்சல் வாக்குகள் : 1333

செல்லாதவை :

என்.அசோக்குமாா் (திமுக) : 60485 ( வெற்றி )

கோவி.இளங்கோ (அதிமுக) : 57380

சந்திரகாண்டீபன் (தவெக ) : 45192

புவனா மணியரசன் (நாதக) :9036

ரவி (அஇபுமக) :559

நெய்வேலி சசிக்குமாா் (சுயேச்சை) : 512

பசுமை பூமி நடராஜன் (சுயேச்சை) : 414

அருள்முருகன் (சுயேச்சை) : 294

சித்ரவேலு (சுயேச்சை ) 276

உதயகுமாா் (சுயேச்சை) : 240

நோட்டா : 685