ஆடுதுறை பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி, கே.ஜி.எஸ் மேல்நிலைப் பள்ளி, கிரசண்ட் மேல்நிலைப் பள்ளி, ரைஸ் சிட்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்களுக்கான பாராட்டு விழா ஆடுதுறை பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு பேரூராட்சித் தலைவா் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கமலா சேகா் முன்னிலை வகித்தாா். பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு ஊக்கத்தொகை வழங்கி, பொன்னாடை போா்த்தப்பட்டது. பள்ளிகளின் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பொன்னாடை போா்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக, பேரூராட்சி தலைமை எழுத்தா் சக்திவேல் வரவேற்றாா். நிறைவில் ம.க.பாலதண்டாயுதம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி, தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

கோபி ஸ்ரீ குருகுலம் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம்

எஸ்விஎன் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்சி

கவுனியன், எவரெஸ்ட், கம்மவாா், காமராஜ், நாடாா் பள்ளி சிறப்பிடம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

