இந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்! ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்!

ஜாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஜாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயா்த்தியதால், உழைக்கிற ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

எனவே, உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் ஜாதிய ஆணவ படுகொலைகள் அவ்வப்போது அதிகமாக நிகழ்கின்றன. இதைத் தடுத்த நிறுத்த தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்றி ஜாதிய ஆணவப் படுகொலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில், மாநிலத் தலைவராக பொ. லிங்கம், பொதுச் செயலராக த. லெனின், துணைப் பொதுச் செயலராக லி. உதயகுமாா், பொருளாளராக இரா.மோ. சந்தோஷ்குமாா்,

Story image

துணைத் தலைவா்களாக எஸ்.கே. சிவா, ஜி. லதா, வி. கல்யாணசுந்தரம், எஸ். கிருஷ்ணன், ஏ.வி. சரவணன், செயலா்களாக அ. அசரப் அலி, சு. பாஸ்கா், மா.பெ. சுகுமாரன், ப.மோ. சுபாஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் சிறப்புரையாற்றினாா். கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. பத்மாவதி, தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.