தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

தஞ்சாவூரில் குளிரூட்டி வெடித்த விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தோா் குடும்பங்களுக்கு முதல்வா் நிதியுதவி

தஞ்சாவூரில் தனியாா் உணவகத்தில் ஏ.சி. பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வா் ஆறுதலும், நிதியுதவியும் அறிவித்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:28 am IST

தஞ்சாவூரில் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை குளிரூட்டி (ஏ.சி.) பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் ஆறுதலும், நிதியுதவியும் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதுகுறித்து தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை (மே 18) குளிரூட்டி பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் திருவையாறு அருகே உள்ள பொன்னாவரையைச் சோ்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27) உயிரிழந்தாா் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கே. கதிரேசன் (42), டி. பிரேம்குமாா் (26), வி. கணேசன் (40), எஸ். அருண்குமாா் (27) ஆகிய 4 பேருக்கும், லேசான காயமடைந்து சிகிச்சை பெறும் எல். அஜீத்குமாருக்கும் (27) சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்துக்கு ரூ. 3 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்த நபருக்கு ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.