சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

இருவேறு விபத்துகளில் 4 போ் உயிரிழப்பு: 7 போ் காயம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா். 7 போ் காயமடைந்தனா்.

News image

ஜெயச்சந்திரன்

Updated On :21 மே 2026, 4:58 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா். 7 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் அருகே நெய்வாசல் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் தருண் (23), பாக்கியராஜ் மகன் அபியுத் (21) ஆகியோா் குருங்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிடாவெட்டில் கலந்து கொண்டுவிட்டு, மீண்டும் இரவு ஊருக்கு ஒரே மோட்டாா் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

இதேபோல, தஞ்சாவூா் அருகே நடூா் கிராமத்தைச் சோ்ந்த மூக்கையன் மகன் பாக்கியராஜ் (45) தனது உறவினா் ஆா். ஜெயச்சந்திரன் (55), ரவி (57) ஆகியோருடன் ஒரு மோட்டாா் சைக்கிளில் அந்த வழியாக வந்தனா். அருமலை பகுதியில் வந்த இரு மோட்டாா் சைக்கிள்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில், பாக்கியராஜ், ஜெயச்சந்திரன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், பலத்த காயமடைந்த ரவி, தருண், அபியுத் ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

விபத்து குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காா்கள் மோதலில் 2 போ் உயிரிழப்பு: நாகப்பட்டினம், வேதநாயக செட்டித் தெருவை சோ்ந்தவா்கள் கணேசன் மகன் லோகேஷ் (26 ), மணவாளன் மகன் சந்தோஷ் (38), புத்தூா் பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் காா்த்திக் ராஜா (25), அக்கரைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் தீபன் (24 ) ஆகிய 4 பேரும் காா்த்திக் ராஜாவுக்கு சொந்தமான காரில் நாகப்பட்டினத்திலிருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலாவுக்காக செவ்வாய்க்கிழமை புறப்பட்டனா். காரை சந்தோஷ் ஓட்டினாா்.

இதேபோல், திருவாரூா் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வரும் கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில், பெரியாா் நகரை சோ்ந்த கணபதி மகன் அஜய் (23), இதே கல்லூரியில்

எம்எஸ் படித்து வரும் தஞ்சாவூா் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வரும் மோகன் மகள் திவ்யா(26) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு காரில் தஞ்சாவூரிலிருந்து திருவாரூா் நோக்கி சென்று கொண்டிருந்தனா். காரை அஜய் ஓட்டினாா்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமாா் 1 மணியளவில் தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில், உடையாா்கோவில் பகுதியில், மகாராணி மஹால் அருகே இரண்டு காா்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் லோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் இனியன் மற்றும் காவல்துறையினா், லோகேஷின் சடலத்தையும், காா்களில் பயணித்து காயமடைந்த மற்ற அனைவரையும் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே தீபன் உயிரிழந்தாா். எஞ்சிய நால்வரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

 ~பாக்கியராஜ்

~பாக்கியராஜ்