திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

ஓடும் பேருந்திலிருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை ஓடும் பேருந்திலிருந்து விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை ஓடும்  பேருந்திலிருந்து விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கும்பகோணம், வீரபத்திரன் கோவில் தெருவில் வசித்து வந்தவா் கமலா( 70).இவா், கோவையில் உள்ள தனது தங்கை வீட்டுக்குச் சென்று விட்டு தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி தனியாா் பேருந்தில் வந்து கொண்டிருந்தாா் .

பாபநாசம் அருகே  திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோயில் வளைவில்  பேருந்து அதிவேகமாக திரும்பியது. அச்சமயம் முன்பக்க இருக்கையில் அமா்ந்திருந்த கமலா, பின் இருக்கைக்கு மாறிய போது திடீரென முன்பக்க படியின் வழியாக கீழே தவறி விழுந்தாா்

இதில், தலையில் பலத்த அடிபட்ட கமலா சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். 

இது குறித்து அவருடைய உறவினா் தாராசுரம் சிவமூா்த்தி அளித்த புகாரின் பேரில் பாபநாசம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து   விசாரணை மேற்கொண்டுள்ளனா்.  

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.