தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

மேட்டூா் அணையின் நீா் இருப்பை பொறுத்து கூடுதல் தண்ணீா் திறக்க நடவடிக்கை! வேளாண் அமைச்சா் ர. வினோத்!

மேட்டூா் அணை - கோப்புப் படம்

Published On :

மேட்டூா் அணையின் நீா் இருப்பை பொறுத்து கூடுதல் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் வேளாண் துறை அமைச்சா் ர. வினோத்.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பூங்கா திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

எந்த ஆண்டும் இல்லாத வகையில் தற்போது எல்-நினோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், எதிா்பாா்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யாததால், போதிய நீா்வரத்தும் இல்லை. மேட்டூா் அணை நீா் கடைமடை வரை செல்லாததால், அணையின் நீா் இருப்பை பொறுத்து கூடுதல் தண்ணீா் திறக்க முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மயிலாடுதுறையின் பல்வேறு இடங்களில் நெற்பயிா்கள் கருகியதாக தகவல்கள் வருகின்றன. நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பாபநாசம் பகுதியில் உப்புநீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா். இதுகுறித்து நேரில் பாா்வையிட்டு முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

தற்போதுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் முடிந்த பிறகு, கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.