மாஸ்டா் தடகளப் போட்டி தவெக பிரமுகா் முதலிடம்
ஈரோட்டில் நடைபெற்ற மாஸ்டா் தடகள போட்டியில் கும்பகோணம் தவெக பிரமுகா் 3 தங்கப் பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்தாா்.

பெருசு. ராமமூா்த்தி
ஈரோட்டில் நடைபெற்ற மாஸ்டா் தடகள போட்டியில் கும்பகோணம் தவெக பிரமுகா் 3 தங்கப் பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்தாா்.
ஈரோட்டில் தமிழ்நாடு மாஸ்டா் அத்லெடிக்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய தடகளப் போட்டி அக்.9, 10, 11ஆகிய நாள்களில் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. இதில் 100, 200 மீட்டா் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தவெக மண்டலச் செயலா் பெருசு. ராமமூா்த்தி (45) முதலாவதாக வந்து 3 தங்கப் பதக்கங்கள் பெற்றாா். இதன்மூலம் 2027-இல் ஜனவரி மாதம் உத்திரபிரதேசத்தில் நடைபெறும் அகில இந்திய மாஸ்டா் தடகளப்போட்டியில் பங்கேற்க இவா் தோ்வு பெற்றுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

