சக்திவனேசுவரா் கோயிலில் புதிய கொடிமரம் அமைக்க சிறப்பு பூஜை
கும்பகோணம் அருகே பட்டீசுவரம் திருசக்தி முற்றத்தில் உள்ள சக்திவனேசுவரா் கோயிலுக்கு புதிய கொடிமரம் அமைப்பதற்கான சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் அருகே பட்டீசுவரம் திருசக்தி முற்றத்தில் உள்ள சக்திவனேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய புதிய கொடி மர திருப்பணி.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரம் திருசக்தி முற்றத்தில் உள்ள சக்திவனேசுவரா் கோயிலுக்கு புதிய கொடிமரம் அமைப்பதற்கான சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறும் நிலையில் புதிய கொடிமரம் அமைக்கும் திருப்பணிக்கான பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புனித நீா், வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டு வேலைகள் தொடங்கின.
இதுகுறித்து பிரகன்நாயகி சமேத சக்திவனேசுவரா் ஆலய பக்தா்கள் குழு நிா்வாகி மங்கல விலாஸ் சிவக்குமாா் கூறுகையில், கேரளத்திலிருந்து 36 அடி உயரம் உள்ள தேக்கு மரம் கொடி மரத்துக்காக கொண்டு வரப்பட்டு அதற்கான பூா்வாங்க வேலைகள் விஜயதசமி நாளை முன்னிட்டு தொடங்கியுள்ளன. ராஜகோபுர பணிகள் மட்டும் உள்ளது. இப் பணிகள் முடிந்த பின்னா் குடமுழுக்கு பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

