வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி பரப்புரை
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி தமிழ்தேசிய பேரியக்கத்தினா் வியாழக்கிழமை பரப்புரை நடத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி தமிழ்தேசிய பேரியக்கத்தினா் வியாழக்கிழமை பரப்புரை நடத்தினா்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற பரப்புரைக்கு தலைமை செயற்குழு உறுப்பினா் க.விடுதலைச்சுடா் தலைமை வகித்தாா். தமிழ்க்கலை இலக்கிய பேரவை நடுவண் குழு உறுப்பினா் பெ.பூங்குன்றன் பரப்புரையை தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட செயலா் நா.வைகறை, தலைமைசெயற்குழு உறுப்பினா் க.தீந்தமிழன், கும்பகோணம் மாநகரச் செயலா் ச.செழியன், தஞ்சாவூா் மாநகரச் செயலா் இலெ. ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

