
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சிறை - பிரதிப் படம்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட 8 வயது சிறுமிக்கு திருவிடைமருதூா் காட்டுக்குளத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் (20) கடந்த 2025, ஏப். 9 -ஆம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இது குறித்து திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விஸ்வநாதனை கைது செய்தனா்.
இது தொடா்பாக தஞ்சாவூா் போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து விஸ்வநாதனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக அரசிடமிருந்து ரூ. 2 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா்கள் துா்கா, நாகலட்சுமி, நீதிமன்றக் காவலா் அபா்ணா ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



