மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

இது ரயில்வே நியாயம்: தட்டிக் கேட்டதற்கு தண்டம் ரூ. 200

கடந்த 5-ம் தேதி மதுரையிலிருந்து சென்னை சென்ற பாண்டியன் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஆண்கள்,

News image
Updated On :9 செப்டம்பர் 2014, 9:04 pm

ஆர். எஸ். கார்த்திகேயன்

கடந்த 5-ம் தேதி மதுரையிலிருந்து சென்னை சென்ற பாண்டியன் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல தரப்பினரும் பயணித்தனர்.

கொடைரோடு நிலையத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும், இளைஞிகளும் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறினர்.

டிக்கெட் பரிசோதகர் வந்து பரிசோதனை முடித்துச் சென்ற சில நிமிடங்களில் ஒரு படுக்கையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் படுத்துக் கொண்டனர், ஒரு படுக்கை காலியாக இருந்தது. மற்றொரு படுக்கையில் இரு ஆண்கள், ஒரு பெண் என மூவரும் படுத்துக்கொண்டனர். இரு படுக்கைகள் காலியாகவே இருந்தன.

அவர்களின் கூத்தும், கும்மாளமும் பிற பயணிகளுக்கு தாங்க முடியாததாக இருந்தது. இளமையின் அளவு கடந்த விளையாட்டு பயணித்த குழந்தைகள் மற்றும் பெண்களை கூச்சமடையச் செய்தது. மற்றவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறியும் அதனை அவர்கள் கேட்கவில்லை.டிக்கெட் பரிசோதகர் எச்சரித்தும் அவர்கள்  கேட்கவில்லை. லைட்டை நிறுத்திவிட்டு அவர்கள் நடந்து கொண்ட செயல்கள் மற்றவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ரயில் அரியலூர் நிலையத்தை நெருங்கியபோது, பயணிகள் பொங்கியெழுந்தனர். அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரயில் நின்றது.

டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டனர்.  டிக்கெட் பரிசோதகர், அந்த வடமாநில இளசுகள் அனைவரையும் ரயிலை விட்டு கீழே இறங்கச் சொன்னார். அவர்களும் வெட்கமோ, கூச்சமோ இன்றி சாதாரணமாக ஏதும் நடக்காததுபோல் இறங்கிச் சென்று விட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ரயில்வே பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட பெட்டிக்கு வந்தனர். அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தது யார் எனக்கேட்டனர். அதில் 3 பயணிகள் தாங்கள்தான் இழுத்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்களைப் பெற்ற பாதுகாப்பு படையினர் 2 நாளில் திருச்சி ரயில் நிலையத்துக்கு வர வேண்டும் எனக் கூறினர்.

செப். 8-ம் தேதி திருச்சி வந்தபோதுதான் ரூ. 1000 அபராதம் செலுத்த வேண்டும் என்ற விஷயம் தெரியவந்தது. ஏன் எனக் கேட்டபோது, அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய குற்றத்துக்காக என ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறினர். ""சரி நாங்கள் கட்டுகிறோம். அந்த இளசுகளின் அநாகரிக செயல்களுக்கு என்ன தண்டனை? அவர்களை யார் தண்டிப்பது.

பொது இடங்களில் அப்படி நடக்கலாமா?'' என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

வேறு வழியில்லாததால் பயணிகள் ரயில்வே நீதிமன்ற நடுவரிடம் விஷயத்தை விளக்கியுள்ளனர். பாதுகாப்பு படையினரை அழைத்து "டோஸ்'விட்ட நடுவர் குறைந்தபட்சமாக ரூ. 200 அபராதம் விதித்து சம்பவம் குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

தட்டிக் கேட்டவர்கள் தண்டிக்கப்பட்டால், பயணிகளில் யார் இனிமேல் தட்டிக் கேட்பார்கள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.