ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

காசோலை மோசடி வழக்கு: நடிகருக்கு பிடிஆணை

காசோலை மோசடி வழக்கில் பிணையம் அளிக்க முன்வராத நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு துறையூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  வியாழக்கிழமை பிடிஆணை  பிறப்பித்தது. 

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:46 pm

DIN

காசோலை மோசடி வழக்கில் பிணையம் அளிக்க முன்வராத நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு துறையூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்  வியாழக்கிழமை பிடிஆணை  பிறப்பித்தது. 
சென்னையைச் சேர்ந்த நடிகர் பவர் ஸ்டார்  சீனிவாசன் கடந்த 2011-ல் துறையூர் பெரிய கடைவீதி வெல்லமண்டி உரிமையாளரான நா. வரதராஜனிடம் ரூ. 60 லட்சம் கடனாகப் பெற்றாராம்.  அந்தக் கடனை அவர் திரும்பச் செலுத்த முடியாத நிலையில் ரூ. 30 லட்சத்துக்கு காசோலை வழங்கினாராம்.  இதையடுத்து வரதராஜன் வங்கியில் செலுத்திய அந்தக் காசோலை கணக்கில் பணமின்றி திரும்பியது.
இதையடுத்து கடந்த 2015-ல்  காசோலை மோசடி செய்ததாக  நடிகருக்கு எதிராக  வரதராஜன் துறையூர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.  இந்த வழக்கானது விதிகளின்படி சென்னை பெருநகர் நீதிமன்றம் (நிலை 2)- க்கு மாற்றப்பட்டது. பின்னர் விதிகளில் செய்த மாற்றத்தைத் தொடர்ந்து மீண்டும் அந்த வழக்கு துறையூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த நீதிமன்றத்தில் நேரில் வந்து பிணையம் அளிக்க வேண்டிய பவர்ஸ்டார்  சீனிவாசன் தொடர்ந்து ஆஜராகத் தவறி வந்த நிலையில் குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ். வடிவேல் வியாழக்கிழமை அவருக்கு எதிராகப் பிடிஆணை பிறப்பித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.