திருச்சி உய்யக்கொண்டான் திருமலையில் அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநகர் மாவட்ட 53- ஆவது வார்டு சார்பில் உய்யக்கொண்டான்திருமலை செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்டச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ப.குமார் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி முன்னிலை வகித்தனர். முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். முகாம் தொடக்க நிகழ்வில், மாநகர் மாவட்ட மாணவரணிச் செயலர் கார்த்திகேயன், பகுதிச் செயலர்கள் நாகநாதர் பாண்டி, அன்பழகன், பூபதி, நிர்வாகிகள் அருள்ஜோதி, ஏர்போர்ட் விஜி, சகாதேவ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தினேஷ்குமார் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு

வாக்களிக்கிறது மேற்கு வங்கம்!

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய ரிசர்வ் காவல் படையில் 9197 காவலர் பணியிடங்கள்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

