மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

கல்லறைத் தோட்டம்: வட்டாட்சியர் தலைமையில்அமைதிப் பேச்சுவார்த்தை

துறையூரில் கல்லறைத் தோட்டம் அமைப்பது தொடர்பா வட்டாட்சியர் தலைமையில்  அமைதிப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 2:40 am

துறையூரில் கல்லறைத் தோட்டம் அமைப்பது தொடர்பா வட்டாட்சியர் தலைமையில்  அமைதிப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. 
துறையூர் புனித ராயப்பர்-சின்னப்பர் தேவாலயத்தைச் சேர்ந்த ஆர்.சி. கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டம் அமைப்பதற்காக அம்மாப்பட்டியில் நிலம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அம்மாப்பட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, வட்டாட்சியர் எஸ். சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து முடிவெடுக்க முசிறி கோட்டாட்சியருக்கு பரிந்துரைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.