பாரம்பரிய சித்த மருத்துவர்களை கணக்கெடுத்து பயிற்சி அளித்து அங்கீகாரம் வழங்க வேண்டுமென சித்த மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
முசிறியில் ஒருங்கிணைந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் நலச்சங்கம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஓய்வு பெற்ற அரசு சித்த மருத்துவர் கோசிபா தலைமை வகித்தார். மதுரை சித்த மருத்துவ குருகுல மருத்துவர் முத்தரசன், சித்த மருத்துவர்கள் மகேசுவரி, சித்ரா தர்ஷினி, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிக்கு அரசு நிதியுதவி அளிப்பதைப் போல, சித்த மருத்துவத்திற்கும் வழங்க வேண்டும். தோட்டக்கலை, வேளாண் துறை மூலம் கிடைக்கும் மூலிகை விதைகளை பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு வழங்குவது, சித்த மருத்துவர் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவர்களை முழுவதுமாக அரசு கணக்கெடுத்து பயிற்சி அளித்து அரசின் அங்கீகாரச் சான்று வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத் தலைவர் ஆ.ச.பழனிச்சாமி வரவேற்றார். குளித்தலை எம்.அய்யர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

