டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மானியத் தொடக்கப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு

வையம்பட்டி அருகே தனியாரிடம் உள்ள மானியத் தொடக்கப்பள்ளி நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:39 am

வையம்பட்டி அருகே தனியாரிடம் உள்ள மானியத் தொடக்கப்பள்ளி நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அமையபுரத்தில் 50 ஆண்டுக்கு மேலாக மானியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தற்போது 135 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். 
பள்ளியின் நிலம் புறம்போக்காகவும், கட்டடம் ஊராட்சி நிர்வாகத்திடமும், நிர்வாகம் தனியாரிடம் இருப்பதால் பள்ளியை பராமரிக்க முடியாமல் உள்ளது.  
எனவே, தனியாரிடம் இருக்கும் நிர்வாகத்தை ரத்து செய்து, அரசு கையப்படுத்தி சிதலமடைந்த கட்டடத்தை சீரமைப்பதோடு, கூடுதல் கட்டடம் அமைத்து, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஊர்மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை (ஏப்.9) மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.