ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம்

தேசிய எலும்பு  மற்றும் மூட்டுதினத்தையொட்டி திருச்சியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :

தேசிய எலும்பு  மற்றும் மூட்டுதினத்தையொட்டி திருச்சியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு எலும்பியல் மருத்துவர்கள் சங்கத்தின் திருச்சி கிளை மற்றும் திருச்சி ஆர்த்தோ கிளப் ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை  தென்னூர் உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தொடக்கி வைத்தார்.இந்த ஓட்டம் புதிய நீதிமன்ற இணைப்புச் சாலை, கண்டோன்மென்ட், பாரதிதாசன் சாலை,  தலைமை அஞ்சல் நிலையம்,  குட்ஷெட் மேம்பாலப் பகுதி, டிவிஎஸ் டோல்கேட் வழியாக திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நிறைவடைந்தது. சுமார் 1,700 பேர் ஓட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவுக்கும் 3 பேர் வீதம் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் 3 பேருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜி. அனிதா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் செ.சம்சாத் பேகம், கிராம சேவைகள் துணை இயக்குநர் ஆ.சுப்பிரமணி, தமிழ்நாடு எலும்பியல் மருத்துவர் சங்கத் தலைவர்  ரா.முரளிதரன், அரசு மருத்துவக் கல்லூரி எலும்பு முறிவு துறைத் தலைவர் ப. மதிவாணன், சௌடாம்பிகா கல்வி குழுமத் தலைவர்  எஸ்.ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, எலும்பியல் மருத்துவர் சங்கத்தின் திருச்சி கிளைச் செயற்குழு உறுப்பினர் ஜோ. டெரனஸ் ஜோஸ் ஜெரோம் வரவேற்றார். திருச்சி ஆர்த்தோ கிளப் செயலர் முகேஷ் மோகன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.