திருச்சி விமான நிலையத்தில் ரூ. 13.43 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்க நகைகளை சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை காலை வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த ராதா கேசவன் (41) என்பவர் தனது உடைமைகளுக்குள் மறைத்து 206 கிராம் எடையுள்ள தங்க வளையல்கள், சங்கிலிகள் உள்ளிட்ட நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 6.15 லட்சமாகும். அதேபோல், சார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை சோதனை நடத்தியதில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அகமது மைதீன் (39) என்பவர் 233 கிராம் தங்கச் சங்கிலி கொண்டு வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 7.28 லட்சமாகும். இருவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







