சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் நாளை முதல் மருத்துவ முகாம், மூலிகைக் கண்காட்சிகள்

திருச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில், 2-ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு இலவச

Updated On :25 டிசம்பர் 2018, 9:52 am IST

திருச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில், 2-ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்கள்,  மூலிகைக் கண்காட்சிகள்  மற்றும் விழிப்புணர்வு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ் கூறியது: சித்த மருத்துவத்தை தோற்றுவித்தவர்கள் சித்தர்கள் என போற்றப்படுகிறது. இதில் 18 சித்தர்களில் முதன்மையானவர் அகத்தியர் சித்தரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில்  அவர் பிறந்த நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அகத்தியரின் பிறந்த தினத்தை கடந்தாண்டு,  தேசிய சித்த மருத்துவ தினமாகக் கொண்டாட மத்திய மாநில அரசுகள் அறிவித்து கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் நிகழாண்டு  2ஆவது தேசிய சித்தர் தினம்  டிசம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
அதன்படி, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள 124 அரசு சித்த மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்,  டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 3 வாரங்களுக்கு  சிறப்பு மருத்துவ முகாம்கள், மூலிகைக் கண்காட்சிகள் மற்றும் சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி புத்தூரில் உள்ள  அரசு தலைமை சித்த மருத்துவமனையில், டிசம்பர் 26 முதல் 31 ஆம் தேதி வரையில் தினசரி ஒரு சிறப்பு மருத்துவ முகாம் என்ற வகையில் முகாமுடன் மூலிகைக் கண்காட்சியும் நடைபெறுகிறது.  
மேலும் இதே நாளில் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில்  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நோய்களை பற்றிய சிறப்பு விழிப்புணர்வு சொற்பொழிவுகள் மாலை 4 மணிக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. மேலும், டிச. 26 ஆம் தேதி முதல் 31 வரை அகில இந்திய வானொலி நிலையத்தில் காலை 11 மணிமுதல் மதியம் 1 மணி வரை உடல் நோய்கள் குறித்த நேயர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் நேரடி நிகழ்ச்சி  ஒலிபரப்பாக இருக்கிறது. 
இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.