சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.43 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 13.43 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்க நகைகளை சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். 

Updated On :25 டிசம்பர் 2018, 9:49 am IST

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 13.43 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்க நகைகளை சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். 
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை காலை வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த ராதா கேசவன் (41) என்பவர் தனது உடைமைகளுக்குள் மறைத்து 206 கிராம் எடையுள்ள தங்க வளையல்கள், சங்கிலிகள் உள்ளிட்ட நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 6.15 லட்சமாகும். அதேபோல், சார்ஜாவிலிருந்து வந்த பயணிகளை சோதனை நடத்தியதில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அகமது மைதீன் (39) என்பவர்  233 கிராம் தங்கச் சங்கிலி கொண்டு வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 7.28 லட்சமாகும். இருவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.