முகவரி கேட்பது போல வந்து, சங்கிலி மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கோட்டை, வெலிங்டன் வீதி, வி.என். நகர், முதல் குறுக்குத்தெரு, மயிலவன் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர் உபகாராஜ் மனைவி திவ்யா (27). இவர் சனிக்கிழமை முற்பகல் வீட்டின் முன்பகுதியில் செல்லிடபேசியில் பேசியபடி நின்றிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் ஒரு முகவரியை விசாரித்தார்.
அவருக்கு பதில் அளித்தபோது, அவரிடமிருந்த செல்லிடபேசி மற்றும், அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் சங்கிலி ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். தகவலின்பேரில் கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

