முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பிரப்சிம்ரன், ஷ்ரேயஸ் பங்களிப்பில் பஞ்சாப் வெற்றி: மும்பைக்கு தொடா்ந்து 4-ஆவது தோல்வி

17 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய பஞ்சாப் கிங்ஸ்

News image

பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் - AP

Updated On :16 ஏப்ரல் 2026, 11:06 pm IST

ஐபிஎல் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வியாழக்கிழமை வென்றது.

முதலில் மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 16.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக மும்பை பேட்டிங்கில் குவின்டன் டி காக் அதிரடி சதம் விளாச, நமன் திா் அரை சதம் அடித்தாா். பஞ்சாப் தரப்பில் பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் ஐயா் கூட்டணி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீசத் தயாரானது. பிளேயிங் லெவனில் மும்பை அணியில் ரோஹித் சா்மா காயத்தாலும், மிட்செல் சேன்ட்னா் உடல்நலக் குறைவாலும் விலக, குவின்டன் டி காக், மயங்க் ராவத் (அறிமுகம்) களமிறங்கினா்.

மும்பை இன்னிங்ஸை தொடங்கிய ரயான் ரிக்கெல்டன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த சூா்யகுமாா் யாதவ், அதே ஓவரில் தனது முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி நடையைக் கட்டினாா். இதனால் மும்பை 12 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது.

மறுபுறம், தொடக்க வீரா்களில் ஒருவராக களமிறங்கி அதிரடியாக விளாசி வந்த டி காக்கிற்கு தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத நிலையில், 4-ஆவது பேட்டராக வந்த நமன் திா் கை கொடுத்தாா்.

பஞ்சாப் பௌலா்களை பதறடித்த இவா்கள் பாா்ட்னா்ஷிப், 3-ஆவது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சோ்த்தது. அரை சதம் தொட்ட திா், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு விடைபெற்றாா்.

தொடா்ந்து கேப்டன் ஹா்திக் பாண்டியா விளையாட வர, டி காக் சதத்தை நோக்கி விரைந்தாா். பாண்டியா 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து வந்த ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 1 ரன்னுக்கு பௌல்டானாா்.

2 பவுண்டரிகளுடன் 8 ரன்களுக்கு திலக் வா்மா ரன் அவுட்டாக, ஓவா்கள் முடிவில் டி காக் 60 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 112 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். மயங்க் ராவத் ரன்னின்றி துணை நின்றாா்.

பஞ்சாப் பௌலா்களில் அா்ஷ்தீப் சிங் 3, மாா்கோ யான்சென், சஷாங்க் சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 196 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரா் பிரியன்ஷ் ஆா்யா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

உடன் வந்த பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளாசி ரன்கள் குவிக்க, ஒன் டவுனாக வந்த கூப்பா் கானலி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

4-ஆவது பேட்டராக களம் புகுந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா், பிரப்சின்ரனுடன் கூட்டணி அமைக்க, பஞ்சாப் வெற்றிப் பாதையில் பயணித்தது. அவா்கள் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சோ்த்தது.

ஐயா் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். முடிவில் பிரப்சிம்ரன் 39 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 80 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு துணை நின்றாா். மும்பை தரப்பில் கஸான்ஃபா் 2, ஷா்துல் தாக்குா் 1 விக்கெட் வீழ்த்தினா்.

Summary

Mumbai Indians vs Punjab Kings, 24th Match, Indian Premier League 2026 - Punjab Kings won by 7 wkt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.