வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

குழந்தை தொழிலாளர்கள் திட்டத்தின் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம்

தேசிய குழந்தைத் தொழிலாளர் சீரமைப்பு திட்டம் சார்பில், சிறப்பு பயிற்சி மையங்களில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கான

News image
Updated On :1 மார்ச் 2018, 3:23 am

DIN

தேசிய குழந்தைத் தொழிலாளர் சீரமைப்பு திட்டம் சார்பில், சிறப்பு பயிற்சி மையங்களில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்  சாக்சீடு மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் கு. இராசமணி உத்தரவின் பேரில், தேசிய குழந்தை தொழிலாளர் சீரமைப்பு திட்டம் (சியர்ஸ்) சார்பில், சிறப்பு பயிற்சி முகாம்களில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி கோட்டை பகுதியில் இயங்கி வரும் சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் பயிற்சி முகாம்  செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. இதில், தேசிய குழந்தைத் தொழிலாளர் சீரமைப்பு திட்டத்தின் திட்ட இயக்குநர் எஸ். பியர்லின் தலைமை வகித்தார். 
பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூக பணித்துறை பேராசிரியர் அருள், சாக்சீடு தொண்டு நிறுவனத்தின் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் சி. சசி, பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் எம். ரீனா ஆகியோர், சிறப்பு பயிற்சி முகாம்களில் பணியாற்றுவோர், குழந்தை தொழிலாளரக்களாக இருந்து மீட்டகப்பட்ட சிறார்களை நடத்தும் விதம்,  மன ரீதியாக அவர்களை கையாளும் விதம், உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகள் அவற்றுக்கான தீர்வு  குறித்து விளக்கி பயிற்சியளித்தனர். தேசிய குழந்தைத் தொழிலாளர் சீரமைப்பு திட்டம் திட்ட மேலாளர் கௌதம், ஆஷா தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் பெர்னி, ஆதியர் காலனி சிறப்பு மைய ஆசிரியர் நாகலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.