/

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.47.64 லட்சம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.47.64 லட்சம் கிடைக்கபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 1:35 am

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.47.64 லட்சம் கிடைக்கபெற்றது.
இம்மாதத்திற்கான (மார்ச்) உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை காலை கருடாழ்வார் சன்னதியில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது. இதில்,  ரொக்கமாக ரூ.47 லட்சத்து 64 ஆயிரத்து 900மும், தங்கம் 126 கிராமும், வெள்ளி 595 கிராமும், வெளிநாட்டு கரன்சிகள் 416 மும் கிடைக்கப் பெற்றது.
கடந்த மாதத்தை விட ரூ.7 லட்சம் குறைவாக இந்த மாதத்தில் கிடைக்கபெற்றது குறிப்பிடதக்கது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஐயப்பா சேவா சங்கம், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.