கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மே 22 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என அஞ்சல் ஆர்எம்எஸ் ஊழியர் சங்கங்களின் இணைப்புக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்த அஞ்சல் ஆர்எம்எஸ் ஊழியர் சங்கங்களின் இணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. மாநில முன்னாள் செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் ஆர்.பி. சுரேஷ், ஜி. கண்ணன், ஆர் தன்ராஜ், விஷ்ணுதேவன், குமரன், ஆர். குமார், எஸ். கோவிந்தராஜ், கே. மருதநாயகம், டி. குணசேகரன், டி.பி. ரமேஷ், பன்னீர்செல்வம், கே. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கமலேஷ் சந்திரா கமிட்டி கொண்டு வந்த, கிராமப்புற அஞ்சலக ஊழியர்களுக்கு (ஜிடிஎஸ்) சாதகமான பரிந்துரைகளை உடன் செயல்படுத்த வேண்டும், அஞ்சல் ஊழியர் சரிபார்ப்பை உடனே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மே 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கப்படும் என கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் தொடரவுள்ளது.
போராட்டத்தில் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள, அஞ்சலக முதுகெலும்பாகச் செயல்படும் சுமார் 2.65 லட்சம் கிராப்புற அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறும் வரையில், கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் ஆர்எம்எஸ் சங்க ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என இணைப்புக் குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

