திருச்சியிலிருந்து பெங்களூரு, கொச்சிக்கு பேருந்து கட்டணத்தைவிட சில நுறு ரூபாய் அதிகமாக கட்டணங்களை நிர்ணயித்து விமான சேவையை தொடங்கவுள்ளது இண்டிகோ விமான நிறுவனம்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, துபை, சார்ஜா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமானப் போக்குவரத்தும், பிற பகுதிகளுக்கு மாற்று (டிரான்ஸிட்) விமானப் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் 15 லட்சம் பயணிகள் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் உள்நாட்டு விமான சேவை திருச்சி-சென்னை இடையே தவிர வேறு பகுதிகளுக்கு இல்லாத நிலை இருந்தது.
இந்நிலையில், ஜெட், இண்டிகோ, அலையன்ஸ் நிறுவனங்கள் திருச்சியிலிருந்து உள்நாட்டு சேவைகளை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன் முதல்படியாக ஜெட் நிறுவனம் சென்னை -திருச்சி இடையே இயக்கி வரும் சேவையுடன் மும்பை, தில்லி நகரங்களுக்கான விமான சேவையை அண்மையில் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இண்டிகோ நிறுவனமும் ஜூன் மாதம் முதல் திருச்சி-சென்னை இடையே போக்குவரத்தை தொடங்கவுள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக ஜூன் 28-ஆம் தேதி முதல் திருச்சியிலிருந்து பெங்களூரு மற்றும் கொச்சி க்கு விமான சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்து கட்டண விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சொகுசு பேருந்து கட்டணங்களை விட சில நூறு ரூபாய் மட்டுமே அதிகரித்து விமானக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சொகுசுப் பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. திருச்சி பெங்களூரு மற்றும் கொச்சிக்கு தலா இரு ரயில்கள் மட்டுமே திருச்சி வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் சொகுசுப் பேருந்துகள்தான் பிரதானமாக உள்ளதால் தமிழ்நாடு, கர்நாடகம், கேரள நிறுவனங்கள் ஏராளமான சொகுசுப் பேருந்துகளை இயக்கி வருகின்றன. அந்த பேருந்துகளின் கட்டணத்தைவிட சில நூறு ரூபாய் மட்டுமே அதிகமாக இருப்பதால் பயணிகள் பேருந்துகளைத் தவிர்த்து விமானத்துக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் வேளாங்கண்ணி வருகை ரத்து

சாலையை கடக்க முயன்ற நாமக்கல் லாரி ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு

சித்தி வீட்டில் நகைகளை திருடிய சிறுவன் உள்பட 3 போ் மீது வழக்கு: 33 கிராம் மீட்பு
மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

