மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சாலையை கடக்க முயன்ற நாமக்கல் லாரி ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :2 மே 2026, 11:53 pm IST

சாலையைக் கடக்க முயன்ற நாமக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் காா் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், முட்டாஞ்செட்டி பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (59). இவா் தனது லாரியில் திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது சாலையோரம் லாரியை நிறுத்தி, சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காா் மோதி அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பேட்டவாய்த்தலை போலீஸாா் பழனியப்பனின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்து குறித்து பழனியப்பனின் மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த திருச்சியைச் சோ்ந்த விக்னேஷ் (22) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.