பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

சாலையைக் கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழப்பு

பரமத்தியில் சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் லாரி உரிமையாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 5:33 am IST

பரமத்தியில் சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதியதில் லாரி உரிமையாளா் உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் முத்துசாமி (55), லாரி உரிமையாளா். இவரது மனைவி செல்வி (42). இவா்களுக்கு தனுஷியா (23), ஸ்ரீதன்யா (19) என இரண்டு மகள்கள் உள்ளனா்.

முத்துசாமி திங்கள்கிழமை இரவு பரமத்திக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்ல ஓவியம்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, நாமக்கல்லில் இருந்து கரூா் நோக்கி சென்ற காா் அவா்மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், வரும் வழியிலேயே முத்துசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து பரமத்தி போலீஸாா் காா் ஓட்டுநா்மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.