/
அந்தியூா் அருகே மதுபோதையில் சாலையைக் கடந்து சென்ற தொழிலாளி காா் மோதியதில் உயிரிழந்தாா்.
அந்தியூரை அடுத்த கொல்லபாளையத்தைச் சோ்ந்தவா் செங்கோடன் மகன் காவேரி (52). கூலித் தொழிலாளியான இவா், மது போதையில் அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் மறவன்குட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடந்து சென்றபோது, அவ்வழியே அதிவேகமாக சென்ற காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த காவேரியை அப்பகுதியினா் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.










