பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

ஸ்ரீரங்கம் கோயிலில் அக்.12 இல் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் அக்டோபர் 12 ஆம் தேதி திருவடி சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:52 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் அக்டோபர் 12 ஆம் தேதி திருவடி சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இக்கோயிலின் இணை ஆணையர் பொ. ஜெயராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருப்பவித்ரோத்ஸவம் சாற்றுமறை முடிந்து, பெரியபெருமாள் திருமேனி முழுவதும் தைலம் சாற்றப் பெற்றது. 
தற்போது பெரியபெருமாள் திருமேனி தைலக்காப்பு முழுவதும் நன்குகாய்ந்துவிட்டதால்,  அக்டோபர் 12 ஆம் தேதி  ( வெள்ளிக்கிழமை) புணுகு காப்பு சாற்றி, கவசங்கள் மற்றும் அலங்காரம் செய்வித்து, பிற்பகல் 3.30 மணி முதல் திருவடி சேவை செய்விக்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் திருவடி சேவையைத் தரிசிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.