திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் வியாழக்கிழமைக்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
முக்கொம்பு மேலணை கொள்ளிடம்ஆற்றில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை புதன்கிழமை மாலை பார்வையிட்ட பின்னர் அவர் கூறியது: முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் 30 அடி தொலைவுக்குத்தான் சரி செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. இப்பணி வியாழக்கிழமைக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பே பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. தண்ணீரின்வேகமும், ஆழமும் அதிகமாக உள்ளதால் இந்த இடத்தில் பெரிய பாறாங்கற்களைக் கொண்டு அடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறையினரும், மாவட்ட ஆட்சியரும் இரவு பகல் பாராமல் பணியை முடுக்கிவிட்டு, விரைவாக பணிகளை முடிக்க களத்தில் இருந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக முதல்வரும், துணை முதல்வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விசாரித்து வருகின்றனர். காவிரியின் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் செல்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். புதிய பாலத்துக்கான பணிகள் குறித்து ஆய்வும்நடைபெற்று வருகிறது என்றார் விஜயபாஸ்கர்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் ஆர். செந்தில்குமார், கண்காணிப்புப் பொறியாளர் பி.ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் தி.பெ. கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நகைக்காக மூதாட்டி கொலை: பணிப் பெண் கைது

மெரீனா கடற்கரையில் நேபாள இளைஞா் அடித்துக் கொலை

போதை மாத்திரை கடத்தல்: 5 போ் கைது

மனவளா்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி கைது
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


