இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

அதிமுக பிரமுகரைத் தாக்கிய காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அதிமுக பிரமுகரைத் தாக்கிய புகாரில் காவல் ஆய்வாளர் கென்னடி  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அதிமுக பிரமுகரைத் தாக்கிய புகாரில் காவல் ஆய்வாளர் கென்னடி  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி பிறப்பித்துள்ளார்.
திருச்சி மாவட்டம்,  மணப்பாறையைச் சேர்ந்தவர் பி.வி.கே. பழனிசாமி.   
மாவட்ட ஊராட்சியின் முன்னாள் உறுப்பினரான இவர், செவ்வாய்க்கிழமை இரவு மணப்பாறை காவல் நிலையத்துக்கு வந்த போது அவருக்கும்,  காவல் ஆய்வாளர் கென்னடிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து பழனிசாமியை கென்னடி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னர், காவல் நிலையத்துக்கு வெளியே அதிமுகவினர் தர்னாவிலும் ஈடுபட்டனர்.
இந்த பிரச்னையைத் தொடர்ந்து, நடைபெற்ற சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் மூலமாக தகவல்களைப் பெற்ற திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆர். லலிதா லட்சுமி,  மணப்பாறை காவல் ஆய்வாளர் கென்னடியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி புதன்கிழமை உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.