மாவட்டம் முழுவதும் 1,600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

திருச்சி மாவட்டம் முழுவதிலும் 1,600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

திருச்சி மாவட்டம் முழுவதிலும் 1,600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை (செப்.13) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், இளைஞர் மன்றங்கள் சார்பில் அந்தந்தப் பகுதிகளில் விநாயகர் சிலைகள் 5 முதல் 15 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பொதுமக்களின் வழிபாட்டுக்குப் பின் மூன்றாம் நாளில் சிலைகள் கரைக்கப்படுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான விநாயகர் சதுர்த்திப் விழாவை முன்னிட்டு பீமநகர், பாலக்கரை,  கண்டோன்மென்ட், உறையூர், தென்னூர்,  சங்கரன்பிள்ளை சாலை, மலைக்கோட்டை,  ஆண்டார் வீதி,  காந்தி மார்க்கெட், கருமண்டபம், வயலூர் சாலை உள்ளிட்ட  பகுதிகளில் மாநகரக் காவல்துறை அனுமதியுடன் 300 சிலைகள் வைக்கப்பட உள்ளன.
அதேபோல, மாவட்டத்தில் மணப்பாறை, மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துவரங்குறிச்சி, மருங்காபுரி, துறையூர், தொட்டியம் , கொளக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 1,300 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. 
பாலக்கரை காவல் நிலையம் முற்றுகை:  பாலக்கரை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு காவல்துறை அனுமதி மறுப்பதாகக் கூறி பாஜக பாலக்கரை மண்டலத் தலைவர் ராஜசேகரன் தலைமையில்  ஏராளமானோர் புதன்கிழமை இரவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கத்தில்: கடந்தாண்டு வைக்கப்பட்ட 38 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதியளித்துள்ளது. ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்காக புதிதாக சிலைகள் வைக்க அனுமதி கோரப்பட்டிருந்தவர்களுக்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை. இதனால் புதிதாக சிலை அமைத்து வழிபாடு நடத்த திட்டமிட்டிருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதற்கிடையில், அனுமதிக்கப்படாத இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.