மதுபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகிலுள்ள வேங்கூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (53). என்.ஐ.டி. வளாகத்தில் சமையலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி ரத்தினம், இரு மகன்கள், மகள் உள்ளனர்.
மகன்கள் இருவரும் சமயபுரம் அருகே தாத்தா வீட்டில் வசித்த நிலையில், குணசேகரன் தனது மனைவி,மகளுடன் இருந்து வந்தார்.
குணசேகரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில், மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து செலவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திங்கள்கிழமை இரவு கணவரிடம் ரத்தினம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் மனைவியை குணசேகரன் தாக்கியுள்ளார்.
இதையடுத்து தனது மகன் சுதர்சனத்துக்கு (26) செல்லிடப்பேசி மூலமாக ரத்தினம் தகவல் தெரிவித்தாராம். இதன் பேரில் வேங்கூர் வீட்டுக்கு வந்த சுதர்சன், தாயைத் தாக்கியது குறித்து கேட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கத்தியால் குத்த வந்த தந்தை குணசேகரனை சுதர்சன் தள்ளிவிட்ட போது, சுவரில் மோதி கீழே விழுந்தததில் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு

திமுக - மமக இடையே கொள்கை உறவு: எம்.ஹெச். ஜவாஹிருல்லா
மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


