பெங்களூரு மதபோதகர் தனது காருக்கு பாதுகாப்பாக மனைவியை ஒரு நாள் முழுவதும் திருச்சி விமானநிலையத்தில் தவிக்கவிட்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமானநிலையத்தில் 24 மணி நேரமும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் கார் நிறுத்துமிடம், பூங்கா பகுதிகளில் வெடிகுண்டு பிரிவினர் சோதனை செய்வது வழக்கம். சனிக்கிழமை இரவு முக்கிய விருந்தினர்களின் கார் நிறுத்தும் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு கார் நிற்பதை கண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அருகில் சென்று பார்த்த போது கதவுகள் மூடப்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவர் உள்ளே படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். காரின் கண்ணாடியை தட்டி மூதாட்டியை எழுப்பி அவரிடம் விசாரித்துபோது, பெயர் மரியம்மகிழ்ச்சி எனவும், பெங்களூருவில் இருந்து திருச்சி வழியாக மதபோதகரான தனது கணவர் வின்சென்ட் மற்றும் குடும்பத்தினருடன் கன்னியாகுமரி செல்லும் போது, அவசர அழைப்பின் காரணமாக திருச்சியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்றனர்.
அப்போது காருக்கு பாதுகாப்பிற்காக தன்னை விமானநிலையத்திலேயே விட்டு சென்றதால் காத்திருப்பதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் காரை எடுத்து செல்ல முடியாத அளவிற்கு இரும்புச் சங்கிலியால் பூட்டினர். ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூருவில் இருந்து திருச்சி விமானநிலையம் வந்த வின்சென்ட் தனது கார் பூட்டப்பட்டிருப்பதை கண்டு மனைவியிடம் கேட்ட போது நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், வின்சென்ட்டை எச்சரிக்கை செய்து எழுதி வாங்கிக் கொண்டு காரை எடுத்து செல்ல அனுமதித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay

குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை!
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |


