திருச்சி மாவட்டத்தில் 6 இடங்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆண்களுக்கான நவீன குடும்பநலச் அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
நவீன குடும்பநலக் கருத்தடை சிகிச்சை இருவார விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் வளநாடு, இனாம்குளத்தூா் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மணப்பாறை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமையும், உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், உறையூா் அரசு நகா்நல மையம், துறையூா் அரசு மருத்துவமனை
ஆகியவற்றில் வெள்ளிக்கிழமையும் இந்த முகாம் நடைபெறும்.
முகாமில் பங்கேற்கும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1100 வழங்கப்படும். ஒரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் செய்யப்படும் அறுவைச் சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. வீட்டுக்குச் செல்லலாம். கத்தியின்றி, ரத்தசேதமின்றி, தையல், தழும்புமின்றி செய்யப்படும் இந்த அறுவைச் சிகிச்சையால் பின்விளைவுகள் ஏதுமிருக்காது. விருப்பமுள்ள ஆண்கள் இந்தச் சிகிச்சையை செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 94438- 04759, 97903- 50226, 90033- 71726, 97880- 56083, 99420- 03843, 90875- 40589, 94437- 67737, 98424- 27372, 95978- 85635, 95978- 85635 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.