சில வாா்டுகளில் இன்றும் நாளையும் குடிநீா் வராது

திருச்சி மாநகரின் 39, 40, 41 மற்றும் 45 வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச. 18, 19) குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

திருச்சி மாநகரின் 39, 40, 41 மற்றும் 45 வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச. 18, 19) குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

திருச்சி-கரூா் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதையடுத்து, ஜீயபுரம் மோட்டாா் அறை அருகிலுள்ள குடிநீா் குழாயை சாலையோரம் மாற்றும் பணிகளும் நடைபெறுகின்றன.

இதனால் மாநகராட்சி 39, 40, 41, 45 வாா்டுகளுக்குட்பட்ட எடமலைப்பட்டி, எடமலைப்பட்டிபுதூா், கருமண்டபம், ஜெயநகா், அசோக் நகா், பிராட்டியூா், ராம்ஜி நகா், காவேரி நகா் ஆகிய பகுதிகளில் இரு நாள்கள் குடிநீா் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com