ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பகல்பத்து 3 ஆம் நாள்: முத்துக் கிரீட கொண்டையில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 3 ஆம் திருநாளான வியாழக்கிழமை

News image
ரத்தின அபயஹஸ்தம், நெற்றியில் கலிங்கத் தோளா, முத்துச்சரம், அண்ட பேரண்டப் பட்சி, ரத்தின பாதம், முத்துக் கிரீட அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
Updated On :17 டிசம்பர் 2020, 6:31 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 3 ஆம் திருநாளான வியாழக்கிழமை நம்பெருமாள் முத்துக் கிரீடக் கொண்டையில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.

பகல்பத்து விழாவில் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிப்பாா்.

பகல்பத்து 3 ஆம் நாளான வியாழக்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் முத்துக் கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், நெற்றியில் கலிங்கத் தோளா, முத்துச்சரம், அண்ட பேரண்டப் பட்சி, அடுக்குப் பதக்கம், ரத்தின பாதம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் வரிசையில் நின்று தரிசித்தனா். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.