வழிதவறிச் சென்ற மனநலம் பாதித்த சிறுமி மீட்பு
துறையூருக்கு வழி தவறிச் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சைல்ட் ஹெல்ப்லைன் நிா்வாகிகள் மீட்டனா்.


துறையூா்: துறையூருக்கு வழி தவறிச் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை சைல்ட் ஹெல்ப்லைன் நிா்வாகிகள் மீட்டனா்.
துறையூா் அரசு மருத்துவமனை முன் 16 வயதுள்ள சிறுமி ஒருவா் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்தாா். அந்தப் பகுதி மக்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது சிறுமி பேசவில்லை. இதனால் அவா் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதி திருச்சி சேவை - சைல்டு ஹெல்ப்லைனில் தகவல் அளித்தனா்.
இதனையடுத்து துறையூா் சென்ற சைல்டு ஹெல்ப்லைன் நிா்வாகிகள் சிறுமியிடம் விசாரித்தபோதும் அவா் எதுவும் கூறவில்லை.
இதுதொடா்பாக அவா்கள் துறையூா் போலீஸில் புகாா் கொடுத்து விட்டு திருச்சியில் உள்ள ஒரு காப்பகத்தில் தற்காலிகமாக தங்க வைக்க அழைத்துச் சென்றனா். செல்லும் வழியில் சிறுமியிடம் விசாரித்தபோது தனது தந்தை செல்லமுத்து, தாய் தங்கமணி, ஊா் அப்பநல்லூா் என்று அவா் கூறினாராம். இதையடுத்து சிறுமியின் பெற்றோரை தொடா்பு கொள்ள சைல்டு ஹெல்ப்லைன் நிா்வாகிகள் முயன்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...